Advertisment

இளையராஜா எழுதி, இசையமைத்து வெளியிட்ட ‘பாரத பூமி’ பாடல்! 

ilaiyaraja

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 8000 பேராக உயர்ந்துள்ளது.

Advertisment

இதனிடையே கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்கு துறைகளான சினிமா மற்றும் அதையொத்ததுறைகளில்எந்தவித ஷூட்டிங்கும் நடைபெறாமல் இருந்தது.

Advertisment

இந்த கரோனா காலகட்டத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் என அனைவரும் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். இந்த வீரர்களுக்காக பல பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் பாடல்களை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்தப் பாடலுக்கு இசையமைத்தது மட்டுமன்றி பாடல் வரிகளையும் இளையராஜாவே எழுதியுள்ளார். இப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். பியானோ, கீ போர்டு உள்ளிட்ட வாத்தியங்களின் இசையை, இளையராஜாவின் மேற்பார்வையில் லிடியன் செய்துள்ளார். 'பாரத பூமி' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் பாடலை தனது யூ ட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளார் இளையராஜா.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/7d9L4pF3j8g.jpg?itok=dVZ5r7ln","video_url":" Video (Responsive, autoplaying)."]}

ilaiyaraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe