Advertisment

பரத், வாணி போஜன் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

brhrehgf

Advertisment

அக்சஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனத்தின் தயாரிப்பாளார் ஜி. டில்லிபாபு தயாரிப்பில் உருவாகிவரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிகர்கள் பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இதன் முழு படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றதை தொடர்ந்து, இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், இதுகுறித்து தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு பேசும்போது...

"எங்கள் நிறுவனத்தின் ‘Production No 12’ படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது. திறமை மிகுந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம், மிக மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. நடிகர் பரத், வாணி போஜன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் மிக அற்புதமான நடிப்பினை தந்துள்ளார்கள். இயக்குநர் எம். சக்திவேல் அவர்கள் இயக்கும் முதல் படம்போல இல்லை. மிக அனுபவமிக்க ஒரு இயக்குநரைப் போலவே அவர் இப்படத்தை இயக்கியுள்ளார். அவர் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் விரும்பப்படும் இயக்குநராக விரைவில் மாறுவார். இயக்குநராக அவரது திறமையைத் தாண்டி, அவரது திட்டமிடலிலும் அதை செயல்படுத்தும் விதத்திலும் மிகச்சரியாக செயல்பட்டு, இப்படத்தை திட்டமிட்ட பட்ஜெட்டில், உரிய கால அவகாசத்தில் முடித்தது மிக பிரமிப்பானது" என்றார்.

vani bhojan bharath
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe