"மன உளைச்சல் தருகிறது" - பரத்

bharath speech at love movie event

பரத், வாணி போஜன் நடிப்பில்காதல், த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் 'லவ்'. ஆர்.பி. பாலா தயாரித்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ரோனி ரபேல் இசையமைக்கிறார். ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ளபத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மூத்த பத்திரிகையாளர்கள் இணைந்து 'லவ்' படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.

நடிகை வாணி போஜன் பேசியதாவது, "நான் நிறையபடங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் சில படங்களேமனதிற்கு முழு திருப்தியை கொடுக்கும். இந்தப் படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் நானும் பரத்தும் நிறைய சண்டைகள் போட்டுள்ளோம், அடிகளும் பட்டன. ஆனால் அது படத்திற்காக மட்டும் தான்.படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். நன்றி" என்றார்.

நடிகர் பரத் பேசியதாவது, "இங்கு எனது 50வது படத்தில் உங்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சி. என் திரை வரலாற்றில் மோசமான படங்கள் செய்த போதும், நீ நல்லா பண்ணியிருக்க, நல்லா பண்ணு, நல்லா வருவ என எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்களுக்கு நன்றி. இந்தப் பயணம் மிகப்பெரியது. ஷங்கர் சார், ஏ.எம். ரத்னம் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் செய்யும் போது மிகுந்தஉற்சாகத்துடன் வேலை பார்க்கிறோம். ஆனால் படம் ரிலீஸ் என வரும் போது பெரும் பிரச்சனைகள் வந்து நிற்கிறது. மன உளைச்சல்தருகிறது. சினிமா இரண்டாகப் பிரிந்து போயிருக்கிறது. ஆனால் நான் எப்போதும் என் வேலையை சிறப்பாக செய்து வருகிறேன்.அதுதான் முக்கியம். இந்தப் படம் எங்கேயும் உங்களுக்கு போரடிக்காது.ஒரு சிறப்பான படம் பார்க்கும் அனுபவம் தரும்." என்றார்.

bharath
இதையும் படியுங்கள்
Subscribe