Advertisment

16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த தேசிய விருது கூட்டணி

bharath next movie with vasanthabalan

தமிழ் சினிமாவில் 'செல்லமே', 'சேவல்', காதல்', 'எம் மகன்' உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த பரத் கடைசியாக 'last 6 hours' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை தொடர்ந்து 'லவ்', 'முன்னறிவான்', 'மிரள்' உள்ளிட படங்களில் நடித்துள்ளார். இதில் 'லவ்' படம் பரத்திற்கு 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில் பரத் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இயக்குநர் வசந்தபாலன் பரத்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இதனை பரத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து வசந்தபாலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "2006-ஆம் ஆண்டு பெரிய வெற்றி கொடுத்த 'வெயில்' பட இயக்குநருடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பசுபதி, பாவனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'வெயில்'. அதோடு அந்தாண்டின் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

bharath vasantha balan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe