'முனி -2' என்ற கேப்ஷனோடு வெளிவந்த 'காஞ்சனா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இந்தப் படத்தில் நாயகன் லாரன்ஸைத் தாண்டி கவனமீர்த்தது சரத்குமார் நடித்த பாத்திரம். ஒரு திருநங்கையாக சரத் நடித்த அந்த பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது, படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக திருநங்கைகளை இழிவுபடுத்தியே காட்சிகள் அமைக்கப்பட்டுவந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர்களை அவர்களுக்குரிய மரியாதையுடன் படமாக்குகின்றனர். இந்தப் போக்கின் ஆரம்பமாக அமைந்த படங்களில் ஒன்று 'காஞ்சனா'. இன்னொரு புறம் திகில் + காமெடி என்ற கலவையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது. இதைத் தொடர்ந்து குறைந்தது முப்பது படங்களாவது இந்த பாணியில் வெளிவந்தன. ஆனால், படம் வெளியாகும் வரை சரத்குமாரின் பாத்திரம் ரகசியமாகவே வைக்கப்பட்டது. முதல் நாள் படம் பார்த்தவர்களுக்கு அது பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தற்போது 'காஞ்சனா' படத்தில் சரத் நடித்த பாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் நடிகர் பரத் நடித்துள்ள 'பொட்டு' படத்தின் போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது. திருநங்கை போன்ற தோற்றத்தில் இருக்கும் பரத் பெரிய பொட்டுடன் கையில் கண்ணாடியுடன் இருக்கிறார். ஏற்கனவே வெளிவந்த போஸ்டர்கள் மூலம் 'பொட்டு' படம் ஒரு திகில் படமென்பது தெரிகிறது. இந்தப் படத்தை இயக்கியுள்ள வி.சி.வடிவுடையான் தற்போது சன்னி லியோன் நடிக்கும் 'வீரமாதேவி' படத்தை இயக்கி வருகிறார். வருகிற மார்ச் 8ஆம் தேதி 'பொட்டு' படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.