Advertisment

ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் பரத்!

Bharath act kalidas 2 movie

Advertisment

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பரத். அதன் பிறகு வெளியான காதல், பட்டியல், எம் மகன், வெயில், என ஹிட் படங்களில் நடித்தார் பரத். ஆனால், பழனி, நேபாளி, ஆறுமுகம், தம்பிக்கு இந்த ஊரு என தொடர் தோல்வி படங்களை கொடுத்ததால், தமிழ் சினிமாவில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார் பரத்.

வெற்றிக்காக காத்திருந்த பரத்திற்கு, கடந்த 2019ஆம் வெளியான ‘காளிதாஸ்’ படம் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவான காளிதாஸ் படத்தில் பரத், ஆன் ஷீடல் ஆகியோர் நடித்தனர். திரில் சஸ்பென்ஸ் ஜானரில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு காளிதாஸ் படத்தின் 2ஆம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது. ‘காளிதாஸ் 2’ படத்தையும் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளரான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் தயாரிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இந்த பட விழாவை சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார், கதிரேசன், அம்பேத்குமார், ஃபைவ் ஸ்டார் கல்யாண், டாடா பட இயக்குநர் கணேஷ் பாபு, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

barath kalidas bharath
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe