Advertisment

தேசியம் பேசும் சல்மான் கான்... வெளியானது ‘பாரத்’ ட்ரைலர்

பாலிவுட்டின் கான்ஸ் என்று அறியப்படுபவர்களில் ஒருவர்தான் சல்மான் கான். இவருடைய படங்களுக்கு உலகம் முழுவதும் கிடைக்கின்ற வரவேற்பு மிகப் பெரியது. ஆனால், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டியூப் லைட், டைகர் ஜிந்தாஹே, ரேஸ் 3 உள்ளிட்ட படங்கள் இவருக்கான வெற்றியை பெற்று தரவில்லை. இதனை அடுத்து கடந்த வருடம் ஷாரூக் கான் நடிப்பில் வெளியான ’ஜீரோ’ படத்தில் ஒரு கேமியோ ரோல் ஒன்றில் நடித்திருந்தார்.

Advertisment

bharat

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில், பாரத் என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் முன்பே வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை புரியலாம் என்று சொல்லப்படுகிறது. சல்மானை வைத்து சுல்தான், டைகர் ஜிந்தாஹே உள்ளிட்ட படங்களை இயக்கிய அலி அப்பாஸ் ஜாஃபர்தான் மூன்றாவது முறையாக சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றுகிறார். கத்ரினா கைஃப், திஷா பட்டானி உள்ளிட்ட நடிகைகள் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். வருகின்ற ஈத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. திரைப்பட விமர்சகர்கள் சல்மான் கான் எப்போதும் ஒரே மாதிரியான தோற்றத்தில் நடிக்கிறார் என்று அவரை விமர்சித்து வருவார்கள். அதை உடைக்கும் விதமாக இந்த படத்தில் பல தோற்றங்களில் சல்மான் நடிக்கிறார்.

Advertisment

இந்த படத்தை தொடர்ந்து தபாங் 3, பிரபுதேவா இயக்கத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Ea_GKoe81GY.jpg?itok=6_6NoVa8","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Bollywood Salman Khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe