Advertisment

பாக்யராஜ் நடிக்கும் ‘ஆனந்த வாழ்க்கை’ 

Bhagyaraj starring anndha vaazhkai

பாக்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஆனந்த வாழ்க்கை’. இவரைத் தவிர்த்து மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடிகண்ணன், பிரியா, மாஸ்டர் ராமானுஜம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

Advertisment

இப்படத்தை ஆர்.சுப்ரமணிய பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். இவர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், பெங்களூரு இன்னோவேடிவ் பிலிம் அகாடமியும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான குறும்பட போட்டியில் ‘பாஞ்சாலி’ என்ற குறும் படத்திற்காக முதல் பரிசு வென்றவர். இவர் தற்பொழுது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

Advertisment

வேதாத்திரி மகரிஷியின் ஆசியோடு, பத்மஸ்ரீ மயிலானந்தம் வழிகாட்டுதலின்படி இத்திரைப்படத்தை ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம் தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

k.bhagyaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe