bhagyaraj Moondram Manithan update

Advertisment

கே. பாக்யராஜ் துப்பறியும் அதிகாரியாக பிரதான வேடத்தில் நடிக்கும் படம் மூன்றாம் மனிதன். இப்படத்தை ராம் தேவ் இயக்கி தயாரிக்கிறார். இப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ரீகாந்த், ரிஷிகாந்த், ராணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் பாடலுக்கான இசையை வேணு சங்கர், தேவ் ஜி அமைத்து இசை அமைப்பாளர்களாக அறிமுகமாகின்றனர். பின்னணி இசையை பி.அம்ரிஷ் என்ற புதுமுகம் அமைக்கிறார்,

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இயக்குநர்கள் எஸ்.பி.. முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா ஆகியோர் வெளியிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கொடைக்கானல்,சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்துள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதை மது ஸ்ரீ பாடியுள்ளார். ராம் தேவ் வரிகள் எழுதியுள்ளார். இப்படம் சஸ்பென்ஸ்த்ரில்லருடன் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நடக்கும் அன்றாட பிரச்சனைகளும் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.