Bhagyaraj met Chief Minister mk stalin

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில்சமீபத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இயக்குநர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், இயக்குநர்எஸ்.ஏ சந்திரசேகர் தலைமையில் மற்றொரு அணியும் களமிறங்கியது. இறுதியில் பாக்யராஜ் தலைமையிலான அணி வெற்றிபெறவேபாக்யராஜ் மீண்டும் எழுத்தாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

Advertisment

இந்நிலையில் இயக்குநர் பாக்யராஜ் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளராகபதவியேற்று கொண்டதையடுத்து இயக்குநர் பாக்யராஜ் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அவருடன் செயலாளர் லியாகத் அலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோரும்சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisment