'இந்தியப் பிரதமர்' காட்சி நீக்கம்; "இந்தியாவை பெயர்மாற்றம் செய்துவிடுங்கள்" - ரத்னகுமார் காட்டம்

Better change India into United States of India says director Rathna kumar

‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார் அடுத்ததாக ஆடை, குலுகுலு ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதனிடையே லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு லோகேஷுடன் இணைந்து திரைக்கதையும் எழுதி வருகிறார். அந்த வகையில், தற்போது விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் 'லியோ' படத்தில் பணியாற்றி வருகிறார்.

ரத்னகுமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான குலுகுலு படம் தெலுங்கிலும் வெளியானது. அந்த தெலுங்கு பதிப்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் 'இந்தியப்பிரதமர்' என்று குறிப்பிடும் காட்சி சென்சாரில் நீக்கப்பட்டிருந்தது. இது செய்தியாக வெளியான நிலையில், அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரத்னகுமார், "திரைப்பட சென்சாரில் தன்னிச்சையாக காட்சிகளை நீக்குவது நியாயமற்றது. இது குலுகுலு படத்திற்கு நடந்தது.

அதற்காக மட்டும் நான் சொல்லவில்லை. ஜனநாயகத்தின் முக்கியத்தூணாக இருக்கும் கலை துறைக்கே இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கிறீர்கள் என்றால், தமிழ்நாட்டைதமிழகம் என மாற்ற முயல்வதற்கு பதில், இந்தியாவை இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) எனப் பெயர்மாற்றம் செய்துவிடுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

censor board
இதையும் படியுங்கள்
Subscribe