bengali actress manjusha neogi passed away

மேற்கு வங்கத்தில் பிரபல மாடல் அழகியும், நடிகையுமானபிதிஷாடி மஜூம்தார்(21)இரு தினங்களுக்கு முன்புதனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இது குறித்துவழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை அவரது காதலன்அனுபாப்பேராவிடம் விசாரணை நடத்தி வருகிறது.இச்சம்பவத்தில் பிதிஷாஎழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகவும்,அது குறித்தும்விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் நடிகை பிதிஷாவின்நெருங்கிய தோழியான மற்றொரு நடிகை மஞ்சுஷா நியோகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொல்கத்தா படோலி பகுதியில் வசித்து வந்த மஞ்சுஷா நியோகி(27) தனது வீட்டில் நேற்று(27.5.2022) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெருங்கியதோழி பிதிஷாதற்கொலை செய்து கொண்டதிலிருந்தே மிக வருத்தத்தில் இருந்ததாகமஞ்சுஷா நியோகியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தோழி இறந்த துக்கம் தாளாமல் மஞ்சுஷா நியோகியும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

கடந்த 15 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமானபல்லவி டே(25) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மேலும் அடுத்தடுத்து இரண்டு நடிகைகள்தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.