bengali actress bidisha de majumder passed away

Advertisment

மேற்கு வங்கத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமானபல்லவி டே(25) சமீபத்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பிரபல மாடல் அழகியாகவும், நடிகையாகவும் இருப்பவர்பிதிஷாடி மஜூம்தார்(21). இவர்கல்கத்தாவில் டம் டம் பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிதிஷாடி மஜூம்தார் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்பக்கமாக பூட்டியிருந்த பிதிஷாவீட்டின் அறை கதவை உடைத்து உள்ளே சென்று அவரது உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். இது குறித்துவழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நடிகை பிதிஷாஅனுபாப்பேரா என்ற நபரை காதலித்து வந்துள்ளார். அவரின் நடவடிக்கை மாறுபாட்டால் சமீபகாலமாக பிதிஷா மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனைதொடர்ந்து போலீசார் அவரிடமும்விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் பிதிஷாஎழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகவும், அது குறித்தும்விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. நடிகை பல்லவி டேவின் மரணத்தில் இருந்தேமீளாத வங்க திரையுலகினருக்கு பிதிஷாவின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர் மரணங்களால்திரையுலகினர் கலக்கத்தில் உள்ளனர்.