உலகம் முழுவதும் அரசியல்வாதிகள், திரைத்துறையினர் மற்றும் பல பிரபலங்கள் மீது பெண்கள் மீடூ புகாரளித்து வருகின்றனர். இந்தியாவில் பாஜகவை சேர்ந்த எம்பி ஒருவர் மீடூ புகாரினால் தன்னுடைய பதவியையே ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதேபோல ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களிலும் மீடூ புகார்கள் குவிகின்றன.

Advertisment

me too

இந்நிலையில் பிரபல பெங்காலி இயக்குனர் அரிந்தம் செல் மீது பெங்கால் நடிகை ரூபஞ்சனா மித்ரா மீடூ புகார் அளித்திருப்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Advertisment

இதுகுறித்து புகாரளித்த நடிகை கூறுகையில், “இயக்குனர் அரிந்தம் செல் தனது அலுவலகத்துக்கு வரும்படி என்னை அழைத்தார். மாலை 5 மணிக்கு அவரது அலுவலகத்துக்கு நான் சென்றபோது அங்கு அவர் மட்டுமே இருந்தார். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் திடீரென்று எழுந்து வந்து என்னை பிடித்து பின்னால் தள்ளிக்கொண்டு போனார்.

அலுவலகத்தில் நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்றார். அவரது ஆசைக்கு உடன்பட மறுத்தேன். சிறிது நேரத்தில் அவரது மனைவி அங்கு வந்தார். அதன்பிறகு நான் அரிந்தமின் அலுவலகத்தில் இருந்து அழுதபடியே வெளியே சென்றேன்” என்றார்.

Advertisment