"நம்ம ஆட்டம் இனிமே வேற மாதிரி இருக்கும்" - பீஸ்ட் ட்ரைலர் அப்டேட் கொடுத்த படக்குழு 

beast

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், அப்பதிவில், "நம்ம ஆட்டம் இனிமே வேற மாதிரி இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

Beast
இதையும் படியுங்கள்
Subscribe