நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிமிக்கானா' பாடலால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஆகிய மொழிகளில் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பீஸ்ட் படத்தின் ட்ரைலர்இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் ட்ரைலர் குறித்தபுதிய தகவலைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரீமியம் லார்ச் ஃபார்மட் (Premium Large Format) முறையில் பீஸ்ட்ட்ரைலர்வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக செல்போனில் வீடியோ பார்க்கும் போதுஸ்கிரீன்சைஸுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவேண்டும். ஆனால் பிரீமியம் லார்ச் ஃபார்மட் முறையில் அப்படிமாற்ற வேண்டிய அவசியம் இல்லை, நம்முடைய போன் ஸ்க்ரீன்சைஸிற்குஏற்றவாறு தானாகவே மாற்றிக்கொண்டு வீடியோவின்அசல் மாறாமல் பார்க்கலாம். இந்தியாவில் இந்த முறையில்வெளியாகும் முதல் வீடியோ பீஸ்ட் படத்தின் ட்ரைலர்என்பது குறிப்பிடத்தக்கது.