Advertisment

தடபுடலாக தொடங்கிய 'பீஸ்ட்' ஷூட்டிங்!

ghdfhsfhdf

'மாஸ்டர்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் விஜய், தன்னுடய அடுத்த படத்திற்காக 'கோலமாவு கோகிலா' படப்புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 'தளபதி 65' எனத் தற்காலிகமாகப் பெயரிட்டு, பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா விரைந்தது.

Advertisment

அங்கு படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படக்குழு இந்தியா திரும்பியது. இந்த நிலையில், 'தளபதி 65' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி, 'பீஸ்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், கரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இன்று (01.07.2021) மீண்டும் தொடங்கியது. சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. விஜய் - பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டுவருகிறது.

Advertisment

Beast
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe