"ஜாலியோ ஜிம்க்கானா"- அடுத்த ஹிட்டுக்கு ரெடியான விஜய்

beast second song release date announced

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, ஏப்ரல் மாதம் 'பீஸ்ட்' படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடலான 'ஜாலியோ ஜிம்க்கானா'பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'பீஸ்ட்' படத்தின் இரண்டாவது பாடல் வரும் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை கு.கார்த்திக் வரிகளில் விஜய் பாடியுள்ளார். இதற்கான முன்னோட்ட வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

actor vijay Beast pooja hegde
இதையும் படியுங்கள்
Subscribe