beast screening theater fire incident

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'.இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகள்மத்தியில் இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதில் சில இடங்களில் விஜய் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் திரையரங்கு கண்ணாடிகளை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் சேலத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் பீஸ்ட் படம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் சற்று யாரும் எதிர்பாராதநிலையில் படம் ஓடிக்கொண்டிருந்த திரை தீப்பிடித்து எரிந்தது. இதனை ரசிகர்கள்சிலர் செய்திருக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.ஆனால் இதனை யார் செய்தார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. திரையரங்கில் இருந்த ரசிகர்கள் ஒருவர் இதனை படம்பிடித்து சமூக வலைதளங்களில்பகிர்ந்துள்ளனர்.

Advertisment