Advertisment

பீஸ்ட் படம் பார்க்க காத்திருந்த ரசிகருக்கு அதிகாலையில் நேர்ந்த சோகம்

beast release vijay fan passed away

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'.இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகள்மத்தியில் இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அதிகாலையில் பீஸ்ட் படம் பார்க்க சென்று விஜய் ரசிகர் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வசித்துவரும் கவுஷிக்தனது நண்பர் பிரித்வி, கவுஷிக்கின்உறவினர் கனிஷ்கா அவரது தோழி நிவேதா ஆகியோருடன் இன்று அதிகாலை காரில் சென்றுள்ளார். வாலாங்குளம் பைபாஸ் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் எதிரே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஒட்டி வந்த கவுசிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ளவர்கள் படுகாயமடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கவுஷிக்கின்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Coimbatore actor vijay Beast
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe