‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தைசன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமானசன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றைவெளியிட்டுள்ளது.அதன்படி இன்று (7.2.2022) மாலை 6 மணிக்கு 'பீஸ்ட்' படத்தின் புதிய அப்டேட்வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Beast Mode ?#BeastUpdate Today @ 6 PM@actorvijay@Nelsondilpkumar@anirudhofficial@hegdepooja@manojdft@Nirmalcuts@anbariv#Beastpic.twitter.com/Y9huHpCqCT
— Sun Pictures (@sunpictures) February 7, 2022