விஜய் வாசிக்க, பூஜா  ஹெக்டே பாட... இணையத்தில் ட்ரெண்டாகும் 'பீஸ்ட்' மோட் 

vijay beast movie shooting spot photos goes viral

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதற்கட்ட படப்பிடிப்பைசென்னையில் நிறைவுசெய்த படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றது. அங்கு ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திவரும் படக்குழு, தற்போது படத்தின் 100வது நாள் படப்பிடிப்பை நிறைவுசெய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் நடிகர் விஜய் ஸ்டைலாக அமர்ந்து ட்ரம்ஸ் வாசிப்பதுபோலவும்,பூஜா ஹெக்டே பாடல் பாடுவது போலவும், மற்ற நடிகர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே இசைக்கருவி வாசிப்பதுபோலவும் காட்டப்பட்டுள்ளது.மேலும், இந்தப் போஸ்டர் தற்போதுரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டுவருகிறது.

actorvijay Beast pooja hegde
இதையும் படியுங்கள்
Subscribe