/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/180_3.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'.இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகள்மத்தியில் இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் இலங்கையில் கொழும்பு நகரில் 50 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கும்மத்தியிலும்விஜய்யின் பீஸ்ட் படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 850 முதல் ரூ. 3000 வரை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)