beast movie release multi language

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிமிக்கானா' பாடலால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment

இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு தற்போது ஒரு புதிய அறிவிப்பைவெளியிட்டுள்ளது. அதன்படி பீஸ்ட்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்திஆகிய மொழிகளில்பான் இந்தியாபடமாகவெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் படக்குழு பல மொழிகளுடன் கூடியபுதிய போஸ்டர்களையும்வெளியிட்டுள்ளது. ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவான 'மாஸ்ட'ர் படம் பிற மொழிகளில் வெளியானாலும் மலையாளத்தில் மட்டும் வெளியாகவில்லை. ஆனால் பீஸ்ட் திரைப்படம் மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகள் வெளியாகவுள்ளதால் இப்படம் விஜய்யின் முதல் பான் இந்தியா படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment