beast movie release may11 sun nxt ott

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'.இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்குமத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வரும் 11 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளங்களில்வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி இயக்கும்தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இப்படத்திற்கு தமன்இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக விஜய் நேற்று முன்தினம் மீண்டும் ஹைதராபாத் புறப்பட்டுசென்றார். இது தொடர்பான வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

Advertisment