/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/127_13.jpg)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர்ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடலூரில்உள்ள தனியார் திரையரங்கில் பீஸ்ட் படத்தின் சிறப்பு கட்சி திரையிட மறுக்கப்பட்டதை கண்டித்து விஜய் ரசிகர்கள் கடலூர் - பாரதி சாலையில் அமர்ந்து சாலை மறியல்போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விஜய் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)