'ரௌடி பேபி...' பாடலின் சாதனையை முறியடித்த 'அரபிக் குத்து' 

beast movie arabic kuthu song crosses 100 Million views 12days

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது. காதலர் தினத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்தின்"அரபிக் குத்து" பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பல சாதனைகளை படைத்துள்ள இப்பாடல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் "அரபிக் குத்து" பாடல் யூடியூப் தளத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி இப்பாடல் வெளியாகி 12 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு தனுஷின் "ரௌடி பேபி" பாடல் 18 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளார்களை கடந்த நிலையில் தற்போது 12 நாளில் இந்த சாதனையை விஜயின்அரபிக் குத்து பாடல் முறியடித்துள்ளது.

actor vijay arabic kuthu Beast
இதையும் படியுங்கள்
Subscribe