'பீஸ்ட்' மோட்; விஜய் குறித்து வெளியான புதிய தகவல்

beast moive new update out now

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிமிக்கானா' பாடலால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஆகிய மொழிகளில் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தில் விஜய் கதாபாத்திரம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பீஸ்ட்படத்தின் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் வீரராகவன்என கூறப்படுகிறது. இந்த பெயர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியும்வருகிறது. மேலும் இப்படத்தின் ட்ரைலர்நாளை(2.4.2022) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor vijay Beast
இதையும் படியுங்கள்
Subscribe