"திரை தீப்பிடிக்கும், வெடி வெடிக்கும்..." - வெளியான 'பீஸ்ட் மோட்' 

beast mode song released

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அரபிக்குத்து ', விஜய் பாடிய 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய இரு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடலானபீஸ்ட் மோட்என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. திரை தீப்பிடிக்கும், வெடி வெடிக்கும் என்று தொடங்கும் இப்பாடலைபாடலாசிரியர் விவேக் வரிகளில்அனிருத் பாடியுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கலந்த லிரிக்ஸ் வீடியோவாக வெளியாகியுள்ள இந்த பாடல் தற்போது பலரின்கவனத்தை பெற்று வருகிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

actor vijay Beast
இதையும் படியுங்கள்
Subscribe