Advertisment

beast and ak62 update release sameday

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து அஜித்தின் 61 ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ எடை குறைக்க திட்டமிட்டு தற்போது 10 கிலோ வரை குறைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

இதனைதொடர்ந்து 'ஏகே 62' படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(17.3.2022) வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோன்று நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் முக்கியமான அறிவிப்பும்நாளை(17.3.2022) வெளியாகும் எனக்கூறப்படுகிறது. இந்த இரண்டு நடிகர்களில்ஏதேனும் ஒரு நடிகர் படம் குறித்து அப்டேட் வந்தாலே சமூக வலைதளங்கள் தாங்காது. இதில் இரண்டு நடிகர்களின் படங்களில் இருந்து ஒரே நாளில் அப்டேட் வருவதால் நாளை சமூக வலைத்தளங்கள் அதகளம்தான் என கூறிவருகின்றனர் நியூட்ரல் ஆடியன்ஸ்.