Skip to main content

சென்னை கமிஷனர் ஆபிஸில் நடந்த சம்பவம் - பயில்வான் பேச்சால் எழுந்த சிரிப்பலை

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

bayilvan ranganathan

 

'ப்ளுசட்டை' என்ற குறும்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் குறும்பட திரையிடல் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

 

நிகழ்வில் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், “பாலசந்தரின் அரங்கேற்றம் படத்திலிருந்து நான் சினிமா விமர்சனம் செய்கிறேன். காலையில் நான்கு மணிக்கு காசு கொடுத்து படம் பார்த்த பிறகுதான் விமர்சனம் எழுதுவேன். 1967ஆம் ஆண்டில் போலீஸுக்கு செலக்ட்டாகி 7 வருடங்கள் எஸ்.ஐ.யாக வேலை பார்த்தேன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் செக்யூரிட்டி ஆபிஸராகவும் இருந்திருக்கிறேன். என்.டி.ராமாராவ், சோபன் பாபுவுடன் சினிமாவில் சண்டை போட்டிருக்கிறேன். இதுவரை நான் பொய் பேசியதில்லை. சினிமா சுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் பேசுகிறேன். நான் சினிமாக்காரன் என்பதால் எனக்கு பெண் கொடுக்க மறுத்தார்கள். அந்த வேதனையில்தான் சினிமா நல்லா இருக்க வேண்டும் என்று பேசுகிறேன்.

 

நான் பொய் பேசமாட்டேன் என்று மக்களுக்குத் தெரியும். மோசமான விமர்சனம் கொடுத்தால் வசூல் பாதிக்கும் என்பதெல்லாம் உண்மையில்லை. வலிமை படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் வந்தது, அதனால் அந்தப் படத்தின் வசூல் கெட்டுவிட்டதா என்ன? நல்ல படங்களை நல்ல படங்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். தேவயானி, நதியா உட்பட பல நடிகைகள் பற்றி இதுவரை நான் பேசியதேயில்லை. யார் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்களோ அவர்களைப் பற்றித்தான் பேசுகிறேன். 

 

இந்த விழாவிற்கு வந்துள்ள பல பெண்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். நான் தவறாக பேசுகிறேன் என்றால் என்னுடன் அவர்கள் எப்படி புகைப்படம் எடுப்பார்கள். சமீபத்தில் கமிஷனர் ஆபிஸிற்கு போயிருந்தேன். அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், பின்றீங்க சார், விடாதீங்க, கிழிகிழினு கிழிங்க சார்னு சொன்னார்கள். நான் பொய் பேசினால் அந்தப் பாவம் என்னை வந்து சேரும். நான் பேசுவது உண்மை என்றால் அந்தப் பாவம் உங்களை வந்து சேரும்” எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” - கருணாஸ் மீண்டும் புகார்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
karunas compalint against bayilvan ranganathan regards trisha admk av raju issue

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புபடுத்திப் பேசியிருந்தார். மேலும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த த்ரிஷா, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். இதையடுத்து முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதனிடையே த்ரிஷாவிற்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால், தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர். இதையடுத்து ஏ.வி ராஜுக்கு த்ரிஷா தரப்பில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து கருணாஸ், தன் மீது வன்மம் கொண்டு அவதூறு மற்றும் அருவருக்கத்தக்க வகையில் பொய்யான தகவலை பரப்பி வந்த அரசியல் கட்சி சார்ந்த ஏ.வி ராஜூ மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளார். யூடியூப் சானலில் தவறான தகவலை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சானல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷ்னரிடம் கருணாஸ் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர். உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். எந்த ஆதாரமும் இன்றி பரப்பப்படும் பொய்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் விளம்பரத்துக்காக பொய்யான செய்திகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Next Story

"கிழி கிழின்னு கிழிப்பாரு.. ஆனா சங்கத்தை தெரியல" - பயில்வான் ரங்கநாதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

The person who had an argument with Bailwan Ranganathan in racer press meet

 

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்து இருக்கும் படம் 'ரேசர்'. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் சதீஷ். அகில் சந்தோஷ் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு பரத் என்பவர் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் நடிகர் பயில்வான் ரங்கநாதனும் கலந்துகொண்டு பேசினார். 

 

அவர் பேசுகையில், "சங்கங்களை குறை சொல்வதை தவிர்த்து விடுங்கள். உங்களால் உள்ளே நுழைந்து போராட முடிந்தால் போராடுங்கள். சினிமா துறையில் கத்துக்கிட்டு சினிமாவுக்கு வாருங்கள். படம் வெளியிடுவதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள்" என தொடர்ந்து சங்கங்கள் குறித்தும் படக்குழுவை பற்றியும் பேசினார். மேலும், "ஸ்டண்ட் யூனியன் என்று ஒன்று இருக்கு. அவர்களது பெயர்களை போட்டிருக்கலாம். இங்கே நிறைய பேர்கள் இருக்கிறது. நான் கேள்விப்படாத சங்கம் பெயர் எல்லாம் இருக்கிறது. சிறு பட தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. நடக்கிற தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. நடக்காத தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது" எனப் பேசினார். 

 

அப்போது மேடையில் அமர்ந்திருந்த சிறு பட தயாரிப்பாளர் சங்கத்தை சார்ந்த ஒருவர் குறுக்கிட்டு பயில்வான் ரங்கநாதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்பு மைக் அருகில் வந்து, "அவனும் தெளிவாக இல்லை. எதுக்கு சார் சங்கம் ஆரம்பிக்கணும். எல்லாருமே திருடன் தான் சார்." என கோபமாக பேசினார். பின்பு இருவருக்கும் மேடையிலே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு பேசிய சங்கத்தை சேர்ந்தவர், "சிறு பட தயாரிப்பாளர் சங்கம் என்று ஒன்று இருப்பதையே தெரியவில்லைனு சொல்லறாரு. இவர் மிகப் பெரிய ஜாம்பவான். சினிமாவில் நடிகர், ஸ்டண்ட் மாஸ்டர். உலகத்துல உள்ள அத்தனை ஹீரோ மற்றும் ஹீரோயின்களை கிழி கிழின்னு கிழிப்பாரு. அவருக்கு இந்த ஏழு சங்கம் தெரியவில்லைனு சொன்னா... நான் என்னத்த சொல்றது" என பேசிவிட்டு அமர்ந்தார். இதனால் அங்கு சற்று பரபரப்பு உண்டானது. அதன் பிறகு பயில்வான் ரங்கநாதன் பேசிவிட்டு அமர்ந்தார்.