bava lakshmanan health update

தமிழ் சினிமாவில் 90 மற்றும் 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்கள் சமீப காலமாக உடல் நலக்குறைவால் மறைந்து விடுகிறார்கள். அல்லது பட வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்கள்.

Advertisment

அந்த வகையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பாவா லட்சுமணன். வடிவேலு காமெடியில் அதிகம் நடித்திருப்பார். இவர் சமீப காலமாகப்பட வாய்ப்புகள் இல்லாமல் வருமானத்துக்குத்தவித்து வந்துள்ளார். இதனால் பெயிண்டராகக் கூட பணியாற்றி உள்ளார்.

Advertisment

இதனிடையே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அது தற்போது அதிகரித்துவிட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது.