robert pattinson

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராபர்ட் பேட்டின்சன். இவர் நடிப்பில் உருவான'டெனட்' படம் கரோனா காலகட்டத்திலும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் ரிலீஸாகி வெற்றிநடைபோடுகிறது.

Advertisment

இதனிடையே பேட்மேன் திரைப்படத்திலும் பேட்மேனாக நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இன்னும் இந்த படத்திற்கு மூன்று மாத ஷுட்டிங் மீதமுள்ளது. தற்போது லண்டனில் மூன்று நாட்கள் ஷூட்டிங் நடைபெற்று வரும்போது தீடிரென ஷூட்டிங்கை நிறுத்தியது தயாரிப்பு நிறுவனம். ஆனால், அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாருக்கு கரோனா என்பதலாம் குறிப்பிடவில்லை. அதேபோல ரபார்ட் பேட்டின்சனும் அறிக்கை வெளியிடவில்லை.

ஆனால், ஹாலிவுட் சினிமா ரிப்போர்ட்டர்கள் வெளியிடும் தகவலில், ஹீரோ ராபர்ட்டிற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

Advertisment