Advertisment

'பேட்மேன்' பட இயக்குனர் மரணம்!

joel schumacher

டிடக்டிவ் காமிக்ஸில் பலருக்கும் பிடித்த சூப்பர் ஹீரோக்களில் ஒருவராக இருப்பது 'பேட்மேன்'. 90 களில் பேட்மேன் ஃபாரவர் மற்றும் பேட்மேன் & ராபின் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோயல் ஸ்குமாசர் மரண்மடைந்துள்ள சம்பவம் டிசி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

1970ஆம் ஆண்டில் ஹாலிவுட்டில் ஆடை வடிவமைப்பாளராக தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய ஜோயல். க்ளாசிக் படங்களான ஸ்லீபர் மற்றும் இண்டிரியர் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 1985ஆம் ஆண்டு செண்ட் எல்மோஸ் ஃபையர் என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற இயக்குனராக ஹாலிவுட்டில் வலம் வந்தார்.

Advertisment

பல வருடங்களாக புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்த ஜோயல், இன்று காலை சிகிச்சை பலனின்றி தனது 80ஆவது வயதில் காலமானார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe