அறிமுக இயக்குனர் ஜி.ரமேஷ் இயக்கிய படம் அடவி. இந்த படத்தில் நான் மகான் அல்ல பட புகழ் வினோத் கிஷன் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பாரதிராஜா, எஸ்.ஆர்.பிரபாகரன், தயாரிப்பாளர் சி.வி.குமார், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Advertisment

barathiraja

அப்போது பேசிய இயக்குனர் பாரதிராஜா, “அடவி என்பது அடர்ந்த வனம் என்பது எனக்கே தெரியவில்லை. தூய தமிழ்ச் சொல். காடுகளை நேசிக்கும் மனிதனால் மட்டுமே இப்படி ஒரு படத்தை இயக்க முடியும். அதுவும் குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் படத்தின் காட்சிகளைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை, மிகவும் நிறைவாக இருக்கிறது” என்று கூறினார்.

மேலும் பேசுகையில், “அடவி போன்ற சிறிய படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சூப்பர் ஸ்டார் நடித்த பெரிய படங்களை வெளியிடாதீர்கள். அந்தப் படங்கள் எப்போது வெளிவந்தாலும் நன்றாக ஓடும். அந்த நாட்களில் சிறிய படங்களை வெளியிட்டால் தான் கவனம் பெறும். அப்பொழுது தான் மக்கள் மனதில் சரியாக போய்ச் சேரும் என்பது எனது கருத்து. அதற்காக தான் நான் போராடிக்கொண்டிருக்கின்றேன். இதை தயாரிப்பாளர் சங்கத்திலும் கூறியிருக்கிறேன்” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.