Advertisment

“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்!

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்வர் சுந்தரம் மற்றும் டகால்டி ஆகிய இரு படங்களும் ஜனவரி 31ஆம் தேதி ஒரு நாளில் ரிலீஸாவதாக இருந்தது. இவ்விரு தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு எங்கள் படம் கண்டிப்பாக ரிலீஸாகும் என்று விளம்பரம் செய்துகொண்டே வந்தனர். இந்நிலையில் இவ்விரு படக்குழுவினரயும் அழைத்து இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச்சுவார்த்தை நடத்தி, இரு தயாரிப்பாளர்களிடையே சமரசம் செய்து வைத்திருக்கிறார். இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் இரு படக்குழு தயாரிப்பாளர்கள், இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

barathiraja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அப்போது பாரதிராஜா பேசுகையில், “பாரதிராஜா என்பவன் இத்தனை வருடங்கள் சினிமாத்துறையில் சம்பாதித்த பெயருக்கு மதிப்புக்கொடுத்து இவ்விரு படத்தின் தயாரிப்பாளர்களும் சமரசம் செய்துகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கும் சர்வர் சுந்தரம் படத்திற்கும் ஒரு எமோஷனல் கனெக்ட் இருக்கிறது. தற்போது நீங்கள் பார்க்கும் பாரதிராஜா வேறு, அப்போது சர்வைவலுக்காக கோதண்டராமன் என்பவரிடம் இரண்டு ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். அவர் சர்வர் சுந்தரம் படம் வெளியாகுவதற்கு முன்பே விநியோகஸ்தர்களுக்கு போட்டுக்காட்டும் காட்சிக்காக ஏவிஎம்-க்கு அழைத்து சென்றார். சாதரணமாக ஏவிஎம்க்கு சென்றிருந்தால் நுழைவு வாயிலுக்கு முன்பே கூர்கா துறத்திவிட்டிருப்பார். ஆனால், அந்த மீடியேட்டருடன் சென்றதால் உள்ளே செல்ல முடிந்தது.

Advertisment

தியேட்டருக்குள் உள்ளே அமர்ந்து வெளியிடாத நாகேஷ் சார் படத்தை பார்க்க போகிறேன் என்று குஷியாக உட்கார்ந்திருந்தேன். அப்போது, முகத்தில் டார்ச் வெளிச்சம் பட்டது. யாரு நீங்கள் என்று கேட்டார்கள், நான் இவருடன் வந்திருக்கிறேன் என்று சொன்னேன். என்னை அழைத்து வந்தவரோ அவர்களை பார்த்து பயந்துகொண்டு, என்னை யார் என தெரியாது என்று சொல்லிவிட்டார். உடனடியாக அந்த மேனேஜர் என் சட்டையை பிடித்து இழுத்து ஏவிஎம் வாசலில் வெளியே விரட்டினார். அப்போது சேலஞ்ச் செய்தேன் ஒரு நாள் மிகப் பெரிய நடிகனாகவோ அல்லது பெரிய இயக்குனராகவோ உருவாகி இதே ஏவிஎம்-க்குள் வருவேன் என்று. அதன்பின் அதே நிறுவனம் புதுமைப் பெண் என்றொரு படத்தை பண்ண என்னை அழைத்தது. இதை சரவணனிடமே சொல்லியிருக்கிறேன். அவர் இதை கேட்டு சிரிப்பார். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் சர்வர் சுந்தரம் படம் பார்க்க போனவனுக்கு இப்படி நிகழ்ந்தது என்பதை தெரிவிக்கதான். இந்த சர்வர் சுந்தரமும் வெளியே வரணும், பிகாஸ் ஐ லவ் ஹிம் நாகேஷ் என்றால் அவ்வளவு பிடிக்கும்” என்றார்.

Santhanam barathiraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe