Skip to main content

“சட்டையை பிடித்து வெளியே தள்ளிய மேனேஜர்..”- ஏ.வி.எம்-ல் பாரதிராஜாவுக்கு நடந்த சோகம்!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்வர் சுந்தரம் மற்றும் டகால்டி ஆகிய இரு படங்களும் ஜனவரி 31ஆம் தேதி ஒரு நாளில் ரிலீஸாவதாக இருந்தது. இவ்விரு தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு எங்கள் படம் கண்டிப்பாக ரிலீஸாகும் என்று விளம்பரம் செய்துகொண்டே வந்தனர். இந்நிலையில் இவ்விரு படக்குழுவினரயும் அழைத்து இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச்சுவார்த்தை நடத்தி, இரு தயாரிப்பாளர்களிடையே சமரசம் செய்து வைத்திருக்கிறார். இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் இரு படக்குழு தயாரிப்பாளர்கள், இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

barathiraja

 

 

அப்போது பாரதிராஜா பேசுகையில், “பாரதிராஜா என்பவன் இத்தனை வருடங்கள் சினிமாத்துறையில் சம்பாதித்த பெயருக்கு மதிப்புக்கொடுத்து இவ்விரு படத்தின் தயாரிப்பாளர்களும் சமரசம் செய்துகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கும் சர்வர் சுந்தரம் படத்திற்கும் ஒரு எமோஷனல் கனெக்ட் இருக்கிறது. தற்போது நீங்கள் பார்க்கும் பாரதிராஜா வேறு, அப்போது சர்வைவலுக்காக கோதண்டராமன் என்பவரிடம் இரண்டு ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். அவர் சர்வர் சுந்தரம் படம் வெளியாகுவதற்கு முன்பே விநியோகஸ்தர்களுக்கு போட்டுக்காட்டும் காட்சிக்காக ஏவிஎம்-க்கு அழைத்து சென்றார். சாதரணமாக ஏவிஎம்க்கு சென்றிருந்தால் நுழைவு வாயிலுக்கு முன்பே கூர்கா துறத்திவிட்டிருப்பார். ஆனால், அந்த மீடியேட்டருடன் சென்றதால் உள்ளே செல்ல முடிந்தது. 

தியேட்டருக்குள் உள்ளே அமர்ந்து வெளியிடாத நாகேஷ் சார் படத்தை  பார்க்க போகிறேன் என்று குஷியாக உட்கார்ந்திருந்தேன். அப்போது, முகத்தில் டார்ச் வெளிச்சம் பட்டது. யாரு நீங்கள் என்று கேட்டார்கள், நான் இவருடன் வந்திருக்கிறேன் என்று சொன்னேன். என்னை அழைத்து வந்தவரோ அவர்களை பார்த்து பயந்துகொண்டு, என்னை யார் என தெரியாது என்று சொல்லிவிட்டார். உடனடியாக அந்த மேனேஜர் என் சட்டையை பிடித்து இழுத்து ஏவிஎம் வாசலில் வெளியே விரட்டினார். அப்போது சேலஞ்ச் செய்தேன் ஒரு நாள் மிகப் பெரிய நடிகனாகவோ அல்லது பெரிய இயக்குனராகவோ உருவாகி இதே ஏவிஎம்-க்குள் வருவேன் என்று. அதன்பின் அதே நிறுவனம் புதுமைப் பெண் என்றொரு படத்தை பண்ண என்னை அழைத்தது. இதை சரவணனிடமே சொல்லியிருக்கிறேன். அவர் இதை கேட்டு சிரிப்பார். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் சர்வர் சுந்தரம் படம் பார்க்க போனவனுக்கு இப்படி நிகழ்ந்தது என்பதை தெரிவிக்கதான். இந்த சர்வர் சுந்தரமும் வெளியே வரணும், பிகாஸ் ஐ லவ் ஹிம் நாகேஷ் என்றால் அவ்வளவு பிடிக்கும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இங்க நான் தான் கிங்கு' - கமல்ஹாசன் வெளியிட்ட கலர்ஃபுல் போஸ்டர்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
kamalhaassan released the poster of santhanam movie Inga Naan Thaan Kingu

நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தொடர்ந்து தற்போது ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் நடித்துள்ளார். சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  'இங்க நான் தான் கிங்கு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலர்ஃபுல்லாக இந்த போஸ்டர் அமைந்துள்ள நிலையில் வருகிற கோடைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் முந்தைய படங்கள் போல காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.

Next Story

“கடவுள் நம்பிக்கையை அரசியல் பண்றது தப்பு” - சந்தானம்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
santhanam about god beleif in  Vadakkupatti Ramasamy success meet

டிக்கிலோனா படம் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் யோகி, மீண்டும் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2 ஆம் தேதி வெளியானது. முன்னதாக ட்ரைலர் வெளியானபோது, அதில் இடம்பெற்ற ஒரு வசனம் பெரியாரை அவதிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சையானது. பின்பு இசை வெளியீட்டில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என சந்தானம் விளக்கமளித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் சந்தானம், மேகா ஆகாஷ், கார்த்திக் யோகி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சந்தானம் பதிலளித்தார். அப்போது ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், “எந்த கோயிலாக இருந்தாலும் கடவுளை வச்சு காசு பண்றது தப்பு. அதே மாதிரி கடவுள் நம்பிக்கை வச்சு அரசியல் பண்றதும் தப்பு. இதைத்தான் படத்தில் காட்டியிருக்கோம். கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்களுக்கு இருக்கு. இல்லாதவங்களுக்கு இல்லை. அதனால் இரண்டு பேருக்குமே பொதுவாகத்தான் வச்சிருக்கோம். என்னை பொறுத்தவரையில் கடவுள் என்பது இருக்கு. நான் சாமி கும்புடுகிறவன். ஒரு ஆன்மீகவாதி” என்றார்.