கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 508 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
சென்னையில் வைரஸ் தொற்றின் பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா சென்னையிலிருந்து தன்னுடைய சொந்த ஊரான தேனிக்குச் சென்றதால் 14 நாட்களுக்குத் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.ஓய்வு நேரங்களில் பாரதிராஜா தேனியிலுள்ள தனது வீட்டில் தங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சென்னையிலிருந்து அவர் தேனி வந்தார். தேனி மாவட்ட எல்லையில் பாரதிராஜாவைச் சுகாதாரத் துறையினர் சோதித்தனர். இதில் அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரியவர, சிவப்பு மண்டலப்பகுதியில் இருந்து அவர் வந்ததால் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி தேனி நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், பாரதிராஜாவின் வீட்டில் இதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.