தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தி தலைவராக இருப்பவர் இயக்குநர் விக்ரமன். இவருக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக சங்க நிர்வாகிகளிடம் பேசி வந்துள்ளார். ஆனால், நிர்வாக்கிகளோ வரும் ஜூன் இறுதியில் நம் சங்கத் தேர்தல் வர இருக்கிறது. ஆதலால், அதுவரை நீங்களே இருங்கள் என்று சொல்லி வந்துள்ளனர்.

Advertisment

barathiraja

இந்நிலையில் இன்று வடபழனியிலுள்ள தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க அலுவலகத்தில் பொதுக்குழு நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜாவை இச்சங்கத்தின் தலைவராக அனைவரும் ஒரு மனதாக தேர்வு செய்துள்ளனர். அதற்கு அனைவரும் ஒப்புதழ் வழங்கியுள்ளனர்.

மற்ற சங்க பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்த இருப்பதாக பொதுக்குழு அறிவித்துள்ளது.