சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இயக்குநர் இமயம் பாரதிராஜாவை சங்க நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்தனர்.

Advertisment

barathiraja

தலைவராக பதவி வகித்து வந்த இவர், தற்போது திடீரென ராஜினாமா செய்துள்ளார். தலைவராக தேர்தெடுக்கப்பட்டு இரண்டு மாதங்களே ஆகும் நிலையில் பாரதிராஜாவின் இந்த முடிவு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் ராஜினாமா செய்தது குறித்து பேசுகையில், “ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க, எனக்கு கொடுக்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்கிறேன். தேர்தலில் போட்டியிடாமல் ஒருமனதாக தேர்வானதால் ஏற்படும் சங்கட்டங்கள் உருவாகுவதை தவிர்ப்பதற்காகவே இதைச் செய்துள்ளேன்.மூத்த இயக்குநராக சங்க வளர்ச்சிக்கு எனது வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.