Advertisment

டி.ஆர்-க்கு பாரதிராஜா பாராட்டு!

barathiraja

Advertisment

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தரை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சில முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்க திரையரங்க உரிமையாளர்களுக்கு தீர்மானமாக சுட்டிக்காட்டிய விதிமுறைகளுக்கு உடனடியான பலமளித்த சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முக்கியமாக, திரு. டி ஆர் அவர்களுக்கும், திரு. மன்னன் அவர்களுக்கும் நன்றிகள். தயாரிப்பாளர்களின் வலி புரிந்திருப்பதால்தான் டி ஆர் அவர்கள் தன் சங்க நண்பர்களுடன் இணைந்து அற்புதமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Advertisment

வலி புரிந்து உடன் நிற்பதுதான் பலம். இன்றைய சினிமா நிலையை புரிந்து எங்களோடு பயணிக்க ஆதரவளித்த சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கதீர்மானங்களுக்கும், தலைவர் டி. ஆருக்கும், செயலாளர் மன்னன் அவர்களுக்கும், மற்றும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவும், அனைத்துத் தயாரிப்பாளர்கள் சார்பாகவும்நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க நண்பர்கள் சினிமாவின் எதிர்காலம் கருத்தில் கொண்டு, ஒற்றுமையாக நின்றுசெயல்படக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

barathiraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe