‘குற்றப்பரம்பரையை வெப் தொடராக இயக்கும் பாரதிராஜா’-மாநாடு தயாரிப்பாளர் அறிவிப்பு

நடிகரும் எழுத்தாளருமான வேலராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை கதையை இயக்குனர் பாலா இயக்குவதாக இருந்தார். அதே வேளையில் குற்றப்பரம்பரை என்னும் டைட்டிலில் இயக்குனர் பாரதிராஜா உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படம் ஒன்றை எடுக்க இருந்தார். இவ்விருவருக்கும் குற்றப்பரம்பரை என்னும் டைட்டில் யாருடையது என்று பிரச்சனை ஏற்பட்டது.

barathiraja

இந்த பிரச்சனை குறித்து பாலா ஒரு செய்தியாளர் சந்திப்புக்கூட வைத்தார். அப்போது அவர் பாரதிராஜா குறித்தும் அவரது எழுத்தாளர் செல்வக்குமார் குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன்பின் பாரதிராஜா தேனியில் குற்றப்பரம்பரை என்னும் டைட்டிலில் படம் ஒன்றிற்கு பூஜை போட்டார். ஆனால், அதன்பின் அந்த படம் குறித்த எந்த செய்தியும் வெளியாகவில்லை. அதேபோல பாலா இயக்குவதாக இருந்த படம் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது பாரதிராஜா எடுக்கவிருந்த குற்றப்பரம்பரை படம் கைவிடப்படுவதாகவும் அதற்கு பதிலாக வெப் சீரிஸாக அதை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வெப்சீரிஸில் பாரதிராஜாவே நடித்து, இயக்க இருப்பதாகவும் சுரேஷ் காமாட்சி சார்பில் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் அதை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

barathiraja
இதையும் படியுங்கள்
Subscribe