Advertisment

இயலும், இசையும் இணைந்தது...

பாரதிராஜா இயக்கிய முதல் படம் 16 வயதினிலே படத்திலிருந்து பல படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. அவர்கள் இருவரின் கூட்டணி என்பது அந்த காலம் தொட்டு மக்கள் ரசிக்கும்படியாகவே இருந்திருக்கிறது. இவர்கள் இருவரும் தேனியை சேர்ந்தவர்கள். சினிமாவிற்கு முன்பிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்தனர்.

Advertisment

barathiraja

முதல் மரியாதை படத்திற்கு பிறகு பாரதிராஜாவும், இளையராஜாவும் இணைந்து பணிபுரியவில்லை. அதன்பின் இருவரும் மனக்கசப்பில் இருக்கின்றனர் என்று திரையுலகில் பேசப்பட்டது. பல வருடங்களாக இருவரும் பேச்சுவார்த்தையிலேயே இல்லை என்று சொல்லப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக காரில் இருந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பாரதிராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அதனுடன் “பல ஆண்டுகளுக்கு பிறகு இரு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும் இணைந்தது; இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்” என குறிப்பிட்டுள்ளார்.

barathiraja ilaiyaraja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe