Advertisment

”நான் எடுக்க வேண்டிய படத்த நீ எடுத்து வச்சுருக்க...?” - இளம் இயக்குனரிடம் கேட்ட பாரதிராஜா

ஞானச்செருக்கு... உலகத்திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக்கொண்டிருக்கும் அடுத்த திரைப்படம். மறைந்த ஓவியர் வீரசந்தானம், முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன்.

Advertisment

gnanacheruku

“உலகத் திரைப்பட விழாக்களுக்கு போட்டிக்காக அனுப்பப்பட்டதில் ஏறக்குறைய 8 மாதங்கள் உலகம் முழுக்க பயணித்து, 7 சர்வதேச விருதுகளையும், 30க்கும்மேற்பட்ட இடங்களில்சிறந்த படத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது” என்று இயக்குனர் ஒருமுறை நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

Advertisment

ஒரு சிறப்புக் காட்சியில் இப்படத்தை பார்த்தஇயக்குனர் இமயம் பாரதிராஜா,இயக்குனரை பாராட்டியுள்ளார். அதை இயக்குனர் தரணி தனது பேஸ்புக் பக்கத்தில்பதிவிட்டுள்ளார். அதில், “இன்று(23-12-19) ஐயா பாரதிராஜா ஞானச்செருக்கு படத்தை பார்த்தார். என்ன சொல்லுவது, படத்தை கொண்டாடினார். நெகிழ்ச்சியான தருணம். வார்த்தைகள் அவர் உள்மனதில் இருந்து வெளிப்பட்டது. இசை வெளியீட்டு விழாவிற்கு நிச்சயம் வருவேன் என்றார். அவர் வார்த்தைகள் படம் பார்த்து முடித்தவுடன்... "உன் வயசு என்ன... நா எடுக்க வேண்டிய படத்த நீ எடுத்து வச்சிருக்க. இதுக்காகவே Hatsoff. ரொம்ப முக்கியமான படைப்பு இது".

விரைவில் திரையில் வெளிவரவிருக்கும் இப்படம் தமிழ் திரையுலகின் இன்னொரு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

barathiraja gnanacheruku
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe