பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பரத். பின்னர் காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்தார். பட்டியல், எம் மகன், வெயில், கண்டேன் காதலை உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தவர் பரத். இவர் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும்போது இவருக்கு ‘சின்ன தளபதி’என்று பட்டமும் கொடுக்கப்பட்டது. இதை பரத் வேண்டாம் என்றும் தவிர்த்தார்.

Advertisment

salman khan

ஒருசில படங்கள் தோல்வியை காண பின்னர் சினிமாவில் அவ்வளவாக படங்கள் நடிக்காமல் பிரேக் கொடுத்தார். பல வருடங்கள் கழித்து கடுகு என்னும் படத்தில் நடித்து, பலரையும் ஈர்த்தார் பரத்.

Advertisment

alt="miga miga avasaram" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="82a0eac4-445a-426d-ad22-4cd05f903a9c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300-02_20.jpg" />

தற்போது இரண்டு தமிழ் படங்களிலும், இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வரும் நிலையில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே படத்தில் பரத் நடிக்கவுள்ளார். இதுகுறித்து பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்லார். இந்த படமானது அடுத்த வருட ஈத் பண்டிகைக்கு வெளியாகிறது.

Advertisment