Advertisment

ஜி2 படத்தில் பனிதா சந்து நாயகியாகிறார்!

 Panitha Sandhu is the female lead in G2

அதிவி சேஷ் கதையின் நாயகனாக நடிக்கும். 'G2 '( குடாச்சாரி 2) படத்தில் நடிகை பனிதா சந்து நாயகியாக நடிக்கிறார்.

Advertisment

நடிகர் அதிதி சேஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'G2'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் நாயகி யார்? என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 'குடாச்சாரி 2' எனும் இந்த படத்தில் நாயகன் அதிவி ஷேஷுக்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து நடிக்கிறார் என்ற செய்தியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.‌இந்தத் திரைப்படத்தை மக்கள் மீடியா ஃபேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏ கே என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வினய் குமார் சிரிகிடினி இயக்குகிறார்.‌

Advertisment

'மேஜர்', 'காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'கார்த்திகேயா 2' போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் உருவாகும் ஆக்ஷன் கலந்த ஸ்பை திரில்லர் திரைப்படம் தான் 'ஜி2'. இது போன்ற திறமையான நடிகர்களுடனும் இணைவதால் படம் பிரம்மாண்டமாகவும், தரமுடனும் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.‌ 'அக்டோபர்', 'சர்தார் உத்தம்' போன்ற படங்களில் நடித்து, பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வருகிறார் நடிகை பனிதா சந்து. இது மட்டுமின்றி அவர் தற்போது இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை இந்த திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காண்பதற்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் தயாராக இருக்கிறார்கள்.

இது தொடர்பாக நடிகை பனிதா சந்து பேசுகையில், '' இது என்னுடைய முதல் பான் இந்திய திரைப்படமாகும். இதுபோன்ற நம்ப முடியாத தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பார்வையாளர்கள் என்னை முற்றிலும் புதிய அவதாரத்தில் திரையில் பார்க்கவிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆக்கபூர்வமான மகிழ்ச்சியுடன் கூடிய அனுபவமாக இருக்கும். '' என்றார்.

Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe