தடை நீக்கம்; மோகன்லால் படத்திற்கு புதிய நிபந்தனை

Ban on Mohanlal's Monster lifted in Bahrain

மோகன்லால் நடிப்பில் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மான்ஸ்டர்'. ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இப்படத்தில் லக்‌ஷ்மி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உதய்கிருஷ்ணா எழுத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த காட்சிகள் இருப்பதாகக் கூறி வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. இது படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும் என்பதால், தேவையான மாற்றங்களை செய்து படத்தை தணிக்கை குழுவிடம் மீண்டும் சமர்ப்பிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழு படத்தை மறுமதிப்பீடு செய்ய தணிக்கை குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தில் உள்ள 13 நிமிட காட்சிகளை ட்ரிம் செய்யுமாறு தயாரிப்பாளர்களிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி படத்திற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் மோகன்லால் நடித்த'மான்ஸ்டர்' படம் பஹ்ரைன் நாட்டில் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். மேலும் படத்திற்கு தடை விதித்த மற்ற வளைகுடா நாடுகளிலும் மறுமதிப்பீடு செய்யும் முயற்சியை படக்குழு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

mohan lal
இதையும் படியுங்கள்
Subscribe