/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/visithran.jpg)
கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான படம் ஜோசப். மேலும் இந்த படத்தில் ஆத்மியா ராஜன், மாளவிகா, திலேஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் கேரளாவிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் ரீமேக் உரிமையை தயரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கைப்பற்றினார். வர்மா சர்ச்சைக்குபின்னர் இயக்குனர் பாலா இந்த படத்தை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
ஜோசப் தமிழ் ரீமேக்கில் நாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடிக்கிறார். மலையாளத்தில் அந்த படத்தை இயக்கிய பத்மகுமார்தான் இதையும் இயக்குகிறார். கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. அதன்பின் லாக்டவுனால் படத்தின் ஷூட்டிங் தடைப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு விசித்திரன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் நடிப்பதற்காக ஆர்.கே. சுரேஷ் உடல் எடையை 73 கிலோ எடையில் இருந்து, 95 கிலோ எடைக்கு உருமாறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)