Advertisment

கரோனா பாதிப்புக்குக் கோடிகளில் நிதியுதவி அளித்த பாலகிருஷ்ணா..!

கரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே போகிறது. இரண்டாயிரத்துஐநூறுக்கும்மேற்பட்டோர் இதுவரை இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

khgj

மேலும் சினிமா துறையினரும் வீட்டுக்குள்ளேயே முடங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் திரையுலகினர் பலர் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்கள்.அந்த வகையில் நடிகர் பாலகிருஷ்ணா ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்ச ரூபாயும்,கரோனா நெருக்கடிக்கான தொண்டு அமைப்புக்கு 25 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளார்.மேலும் பாலகிருஷ்ணாவின் இளைய மருமகனான பாரத், தான் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் சார்பாக 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

balakrishna
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe