Advertisment

ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பேச்சு; பாலகிருஷ்ணாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Balakrishna

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான என்.டி. ராமாராவின் மகன் பாலகிருஷ்ணா, தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகராக அறியப்படுகிறார். இவர், தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையாக வெடித்துள்ளது. அதில், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து அவர் கூறிய கருத்து இந்திய இசை ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Advertisment

அப்பேட்டியில் இசையமைப்பாளர்கள் குறித்து பேசிய பாலகிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கூறுகையில், "ஏ.ஆர்.ரஹ்மான் நிறைய படங்களுக்கு இசையமைத்து ஆஸ்கர் வாங்கியிருக்கலாம். ஆனால், அவரை யாரென்றே எனக்குத் தெரியாது" என்றார். மேலும் அப்பேட்டியில், பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்குச் சமம். எந்தவொரு உயரிய விருதும் என்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்குச் செய்த நன்மைக்கு ஈடாகாது” எனத் தெரிவித்தார்.

Advertisment

மூத்த நடிகராக அறியப்படும் பாலகிருஷ்ணாவின் இந்தப் பேச்சைக்கேட்டு அதிருப்தியடைந்த இசை ரசிகர்கள், சமூக வலைதளங்களில் பாலகிருஷ்ணாவுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ar rahman balakrishna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe